ரவா ஊத்தப்பம் (Rava Uthappam)





சிம்பிளாக ஈசியாக செய்யக்கூடிய டிபன் வகை ரவா ஊத்தப்பம்

தேவையான பொருட்கள் 

ரவை - 1 கப் 
தயிர் - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
கேரட் - ஒன்று துருவியது 
வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது 
மல்லி இலை - சிறிதளவு 

செய்முறை

ஒரு கப் ரவையை எடுத்துக்கொள்ள வேண்டும்


அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு 


தயிர் சேர்க்க வேண்டும் 


சேர்த்த பின்னர் 


சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும் 


சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும் 


கலக்கி 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும் 


10 நிமிடம் கழித்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்


அதில்  தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 


நன்கு கலக்க வேண்டும் ரொம்ப தண்ணீர் சேர்க்க கூடாது 


ஊத்தப்பம் ஊற்றும் பத்தில் இருக்க வேண்டும் 


அதை அப்போதே தோசை கல்லைசூடாக்கி 


ஊத்தப்பம் போல சிறிய அளவில் மொந்தமாக ஊற்ற  வேண்டும் 


பின்னர் நறுக்கிய வெங்காயத்தைதூவி விடவும் 


இரண்டாவதாக துருவிய கேரட் தூவி 


மல்லி இலையும் தூவி விடவேண்டும்


கடைசியாக சுற்றி எண்ணெய் ஊற்றி வேகவிடவும் 


1 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும் 


கலர்புல்லான  ஊத்தப்பம் ரெடி  


தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்