மோர் குழம்பு ரொம்ப சிம்பிளாக செய்யக்கூடிய ஒரு குழம்பு இதை வெண்டைக்காய் மற்றும் பூசணிக்காய் சேர்த்து செய்யலாம். அல்லது காய்கள் இல்லாமலும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் - 250 கிராம்
தயிர் - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்
அரைக்கதேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 10 பல்
சீரகம் - ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
தேங்காய் - சிறிய அளவு
தாளிக்க
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 பல்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெண்டைக்காய் நறுக்கி கொள்ளவும்
தயிரை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எடுத்துக்கொண்டு
தேங்காயை துருவி எடுத்துக்கொள்ளவும்
ஒரு மிக்சி ஜாரில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் போட்டு
நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும்
தாளிக்க தேவையான வெங்காயம் மிளகாய் நறுக்கி கொள்ளவும்
நறுக்கி வைத்த வெண்டைக்காயை ஒரு வாணலியில் போட்டு வணக்கவும்
1 ஸ்பூன் ஆயில் போட்டு நன்கு வணக்கி எடுத்துகொள்ளவும்
அடுத்து தாளிக்க ஒரு வாணலியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
பின் எண்ணெய் காய்ந்ததும் 1 ஸ்பூன் கடுகு சேர்த்து
கடுகு பொரியவிடவும்
கடுகு பொரிந்ததும் வெந்தயம் 1 ஸ்பூன் போட்டு பொரிக்கவும்
பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்
நன்கு வணக்கவும்
3 நிமிடம் நன்கு வணக்கவும்
வணங்கியதும் அரைத்த விழுதை சேர்க்கவும்
சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்
கொதித்ததும் வணக்கிய வெண்டைக்காயை சேர்க்கவும்
2 நிமிடம் வேகவிடவும்
2 நிமிடம் கழித்து கரைத்து வைத்த மோரை சேர்க்கவும்
பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்
சுவையான மோர் குழம்பு தயார்