தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கி
பட்டை - 1துண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி -3
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஆயில் - 3 ஸ்பூன்
செய்முறை
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானது ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு மசாலாக்கள் சேர்த்து வணக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வணக்கவும்
நன்கு வணங்கியதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 1 நிமிடம் வணக்கவும்
1 நிமிடம் கழித்து இஞ்சிபூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
பின் மசாலாதூள்களை ஒவ்வொன்றாக சேர்த்து
2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
2 நிமிடம் கழித்து சிக்கனை சேர்த்து கிளறவும்
கிளறி தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் வேகவைத்து தண்ணீர் வற்றி நன்கு கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
சுவையான சிக்கன் கிரேவி