கருப்பு சுண்டல் குழம்பு (Karuppu Sundal Kulambu)


கருப்பு சுண்டல் குழம்பு இது புட்டு, ஆப்பம், தோசைக்கு நன்றாக இருக்கும்.
இந்த குழம்பை ரொம்ப ஈசியாக 30 நிமிடத்தில் செய்யலாம். 
குறைவான பொருட்களை கொண்டு செய்வதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

கருப்பு சுண்டல் - 1 கப் (8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
பெரியவெங்காயம் - 1 
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4 
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 2 ஸ்பூன் ( அரைக்க 1 ஸ்பூன் )
தேங்காய் - 1/2 மூடி 
மஞ்சள் தூள் - 1 1/2 ஸ்பூன்  ( சுண்டல் வேகவைக்க 1/2 ஸ்பூன் )
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் 
குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன் 
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

 
 
8 மணி நேரம் சுண்டலை ஊறவைத்து ஒரு குக்கரில் எடுத்துக்கொள்ள வேண்டும்


அதில் 1 கப் தண்ணீர் விட்டு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 


மஞ்சள்தூள்  1/2 ஸ்பூன் சேர்த்து 6 விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும் 


தாளிக்க தேவையான பொருட்களை நறுக்கிக்கொள்ளவும் 


அரைக்க தேங்காயை தூண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு சோம்பு போட்டு 


நைசாக அரைத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு வேகவைத்த சுண்டலை சேர்த்து அரைத்தால் குழம்பு கெட்டியாக இருக்கும் 


இப்போது தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 


பட்டை கிரம்பு மசாலாக்களை போடவும் 


பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  1 நிமிடம் வணக்கவும் 


வணங்கியதும் தக்காளி சேர்த்து 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடம் வணக்கவும் 


தக்காளி நன்கு வணங்கியதும் மசாலாதூள்களை சேர்க்கவும்


சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வணக்கவும் 


மசாலாக்கள் அடிபிடிக்காமல் இருக்க சிறிதளவு சுண்டல் வேகவைத்த தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்


கொதித்த பிறகு வேகவைத்த சுண்டலை சேர்க்கவும் 


சேர்த்து மசாலாவுடன் 1 நிமிடம் கொதிக்கவிடவும் 


பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 


தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடிவிட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும் 


கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
 

சுவையான மணமான சுண்டல் குழம்பு தயார்