கேரளா சிக்கன் கறி (Kerala Style Chicken Curry)



கேரளா சிக்கன் கறி செய்வது மிக சுலபம் பெரிய வேலை இருக்காது. இரெண்டே முறையில் செய்யலாம். முதலில் கறியை மசாலாக்களை தடவி 30 நிமிடம் வைத்து இரண்டாவது அதை தாளிக்க வேண்டியதுதான்.

தேவையான பொருட்கள் 


மசாலா கலவைக்கு


சிக்கன் - 1 கி 
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது 
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
தயிர் - 3 ஸ்பூன் 

தாளிக்க 


ஆயில் - 3 ஸ்பூன்
பட்டை கிரம்பு - மசாலாக்கள் 
சின்ன வெங்காயம் - 10 பல் நறுக்கியது 
கறிவேப்பிலை - சிறிதளவு 
தக்காளி - 1 நறுக்கியது 
உப்பு - தேவையான அளவு 
சிக்கன் மசாலா - 3 ஸ்பூன் 

செய்முறை 


முதலில் மசாலாக்கள் கலந்து வைக்க தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்


 நன்கு சிக்கனை 4 முறை கழுவி எடுத்துக்கொள்வோம் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 


இரண்டாவதாக இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 


 மூன்றாவதாக மசாலாக்களை சேர்த்து


நன்கு பிரட்டவும்


பிறகு தயிர் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்


 பின்னர் தாளிக்க தேவையான பொருட்களை தயார் செய்யவும் 


30 நிமிடம் கழித்து ஒரு அகலமான வாணலியில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு மசாலாக்களை போட்டு பொரியவிடவும் 


 பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வனக்கவும் 


  2 நிமிடம் கழித்து மசாலா தடவிய சிக்கனை சேர்த்து கிளறவும்


 1 நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறவும் 


 அடுத்து சிக்கன் மசாலாவை சேர்த்து 


 தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் 


 மூடிவைத்து  30-35 நிமிடம் வேகவிடவும் 


 நன்கு வெந்து கிரேவியாக வந்தவுடன் மல்லிஇலை தூவி இறக்கவும் 


சுவையான கேரளா சிக்கன் கறி ரெடி