சிக்கன் 65 (Chicken 65)

 

வீட்டிலேயே சிம்பிளாக செய்யக்கூடிய சிக்கன் 65 எந்த கலர் பவுடர் மிக்ஸ் பண்ணாமல் சுலபமாக செய்வது பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

சிக்கன் - 1/2 கி 
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
தயிர் - 2 ஸ்பூன் 
எலுமிச்சைப்பழம் - பாதி 
சிக்கன் 65 மசாலா - 3 ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன் 
கார்ன்பிளாவர் மாவு  - 2 ஸ்பூன் 

செய்முறை 

1/2 கிலோ சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்


அதில் 2 ஸ்பூன் இஞ்சிபூண்டு பேஸ்டை சேர்க்கவும் 


இரண்டாவதாக தயிர் 2 ஸ்பூன் சேர்க்கவும் 


மூன்றாவதாக சிக்கன் 65 மசாலாவை சேர்க்கவும் 


நான்காவதாக உப்பு 1 ஸ்பூன் சேர்த்து 


கடைசியாக கார்ன்பிளாவர் மாவை சேர்க்கவும் 


எல்லாத்தையும் சேர்த்து நன்கு கலந்து 


கடைசியாக எலுமிச்சைப்பழம்சாற்றை ஊற்றி 


30 நிமிடம் வெயிலில் நன்றாக ஊறவைக்க வேண்டும்


30 நிமிடம் கழித்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்க வேண்டும் 
 

எண்ணெய் காய்ந்தும் ஒவ்வொரு துண்டுகளாக போட வேண்டும் 


10 நிமிடம் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்


சுவையான சிக்கன் 65 ரெடி