சன்னா மசாலா கிரேவி (Channa Masala Gravy)


 

       சப்பாத்தி மற்றும் பூரிக்கு ஏற்ற குருமா சன்னா கிரேவி இது மிகவும் எளிமையான முறையில் செய்யலாம். இந்த கிரேவியில்  தேங்காய் சேர்த்து செய்து இருக்கிறேன் நீங்கள் தேவைப்பட்டால் சேர்க்கலாம் இல்லை என்றால் பரவாயில்லை.

தேவையான பொருட்கள் 

வேகவைக்க 

வெள்ளை சுண்டல் - 1 கப் 
உருளைக்கிழங்கு - 2
உப்பு - 1ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

அரைக்க தேவையானவை 

பெரியவெங்காயம் - 1
தக்காளி - 2 
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
மல்லி தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன் 
தேங்காய் - 4 துண்டு அல்லது கிரேவிக்கு ஏற்ப 
ஆயில் - 2 ஸ்பூன்   

தாளிக்க 

ஆயில் - 3 ஸ்பூன் 
பட்டை - 1 
கிராம்பு -3
சோம்பு - 1 ஸ்பூன் 
பிரிஞ்சி இலை - 1

செய்முறை 

 

சுண்டலை 8 அல்லது 10 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்


அதை ஒரு குக்கரில் போட்டு 2 உருளைக்கிழங்கை சேர்க்க வேண்டும்


பின் அதில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 


உப்பு 1 ஸ்பூன் மற்றும் 


1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவேண்டும் 


இரண்டையும் சேர்த்து கலக்கி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும் 


பின்னர் அரைப்பதற்கு தாளிக்க  ஒரு வாணலியில் 2 ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி

அதில் நறுக்கிய வெங்காயத்தை பொட்டு

நன்கு வதக்க வேண்டும் 


வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்


பின்னர் மஞ்சள்த்தூள் 1 ஸ்பூன்


மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்


மல்லித்தூள் 2 ஸ்பூன்


கரம் மசாலா 1 ஸ்பூன் சேர்த்து கலந்து


 சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விடவும்  


கொதித்த பிறகு நறுக்கிய தாக்களியை சேர்த்து  வணக்கவும்


நன்கு தக்காளி வதக்கியாதும்


சூடு ஆரிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும் 


கிரேவி நன்கு கெட்டியாக வருவதற்குதேங்காயுடன் சிறிதளவு வேகவைத்த சுண்டலை சேர்த்து அரைக்கவும் 


 நைசாக அரைத்து எடுத்து கொண்டு


வேகவைத்த உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக கட் செய்துகொள்ளலாம் 


ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி தாளிக்க பட்டை கிராம்பு மசாலாக்களை சேர்க்கவும்

பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 


எண்ணெய் பிரித்து வரும் வரை கொதிக்க விடவும் 


கொதித்த பின்னர் வேகவைத்த சுன்ண்டைலை 2 நிமிடம் சேர்த்து கொதிக்க விடவும்


2 நிமிடம் கொதித்த பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்


இரண்டாவதாக உருளைகிழங்கை சேர்த்து 


கிளறிவிட்டு


கடைசியாக உப்பு  தேவையான அளவு சேர்த்து 


தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு 

மல்லி இலை தூவி இறக்கவும் 


சுவையானசன்னா மசாலா கிரேவி தயார்