செட்டிநாடு சிக்கன் ஃ பிரை (Chettinad Chicken fry)

 

காரமான செட்டிநாடு சிக்கன் ஃ பிரை எப்படி செய்வது பார்ப்போம் 

தேவையான பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ

வறுத்து அரைக்க 

வரமிளகாய் - 4 
சீரகம் - 1ஸ்பூன் 
மிளகு  - 1 ஸ்பூன் 
பட்டை - 1
கிராம்பு - 2
மல்லி - 1 ஸ்பூன் 
சோம்பு - 1 

தாளிக்க 

பெரிய வெங்காயம்  - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது 
 கறிவேப்பிலை - சிறிதளவு 
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
வறுத்து அரைத்த போட்டி  - 3 ஸ்பூன்
ஆயில் - 3 ஸ்பூன்

செய்முறை 

ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் அரைக்க தேவையான பொருட்களை போட்டு மனம் வரும் வரை நன்கு வறுக்க வேண்டும்



வறுத்து சூடு ஆறிய பிறகு ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு தூளாக பொடிக்க வேண்டும் 


பிறகு தாளிக்க வெங்காயம் தக்காளி எடுத்துக்கொள்ள வேண்டும் 



ஒரு  வாணலியில் எண்ணெய் விட்டு சூடாகியது 



நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 



நன்கு வதக்க வேண்டும்



வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் 


பிறகு இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும் 


இவை வதங்கிய பிறகு மஞ்சள்தூள் 



மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும் 


அதன் பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்



 வதக்கியபிறகு சிக்கனை சேர்த்து கிளறவும்




2 நிமிடம் மூடிபோட்டு வேக விடவும் 


பின் அரைத்த மசாலாவை எடுத்துத்துக்கொள்ள வேண்டும்




2 நிமிடம் கழித்து அந்த மசாலா கலவையை போட்டு


நன்கு கலக்க வேண்டும்




தண்ணீர் ஊற்றாமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவேண்டும் 



உப்பு தேவையான அளவு சேர்த்து 30 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும் 



30 நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கவும்



காரசாரமான செட்டிநாடு சிக்கன் ஃ பிரை ரெடி