சிக்கன் உப்பு கறி (Chicken Uppu Kari)



சுவையான காரமான ஒரு சைடிஷ் உப்பு கறி குறைவான பொருட்களைக் கொண்டு குறைவான நேரத்தில் செய்யலாம். இது ரசம், சாம்பார்க்கு  இந்த சைடிஷ் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள் 


சிக்கன் - 1/4 கி
ஆயில் - ஸ்பூன்
சின்னவெங்காயம் - 10 நறுக்கியது
சீரகம் - 1ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வரமிளகாய் - 5 (காரத்திற்கு ஏற்ப)
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
இஞ்சிபூண்டு - சிறிதளவும் தட்டியது

செய்முறை 


ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி சீரகம் சேர்த்து


பின் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன்


நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து


3 நிமிடம் வதக்க வேண்டும் 


இதில் கறிவேப்பிலை  போட்டு வதக்கி


வரமிளகாயை போட்டு 


1 நிமிடம் வதக்க வேண்டும்  


நன்கு வதக்கிய பிறகு இஞ்சிப்பூண்டு விழுதை சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும்

வதங்கிய பிறகு சிக்கனை சேர்க்கவேண்டும்  


சேர்த்து நன்கு கிளறி 


1 நிமிடம் கழித்து மஞ்சள்தூள் சேர்த்து 


உப்பு சேர்த்து 2 நிமிடம் தண்ணீர் சேர்க்காமல் வேக விடவும் 


தண்ணீர் சேர்க்க தேவையில்லை  சிக்கனில் தண்ணீர் இருக்கும்


நன்கு  கிளறி மூடி போட்டு 15 நிமிடம் வேக விடவும் 


நன்கு தண்ணீர் வத்தி ட்ரையாக வரும் கொத்தமல்லி தூவி இறக்கலாம்


உப்பு கறி ரெடி