தேங்காய் சட்னி ( Coconut Chutney)

                          
  
இட்லி, தோசைக்கு ஏற்ற தேங்காய் சட்னி  3 பேர்க்கு.

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் - 1 கப் துருவியது 
பச்சைமிளகாய் - 2 
பொட்டுக்கடலை - 3 ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன்

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 
வரமிளகாய் - 1


செய்முறை


ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்  பச்சைமிளகாய்  பொட்டுக்கடலை  உப்பு 
சேர்த்து 

 

சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு 


நைசாக அரைத்துக்கொள்ளவும்


தாளிக்க சிறிய வாணலியில் எண்ணெய் விட்டு


கடுகு உளுத்தம்பருப்பு போட்டு


பின் கறிவேப்பிலை வரமிளகாய் போட்டு தாளித்து


அரைத்து வைத்த சட்னியில் கலந்து பரிமாறவும்


சுவையான தேங்காய்  சட்னி  ரெடி