காரச்சட்னி (Kara Chutney)


சிம்பிள் காரச்சட்னி இது இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும் வெறும் மூன்று பொருட்களை கொண்டு செய்யலாம்.

தேவையான பொருட்கள் 

பெரிய வெங்காயம் - 2 
மிளகாய்த்தூள்  - 1 ஸ்பூன் 
உப்பு - 1 ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் 

செய்முறை 

 ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயத்தை நறுக்கி போடவேண்டும்


அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்க்கவேண்டும் 


பின் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நைசாக அரக்க வேண்டும் 


அரைத்த சட்னியில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க  வேண்டும்


சுவையான காரச்சட்னி ரெடி