மசாலா சப்பாத்தி இது ஒரு வகை நார்த் இந்தியன் டிஷ் இந்த சப்பாத்தியில் மசாலா கலப்பதால் இந்த சப்பாத்திக்கு எந்த குருமாவும் தேவைப்படாது இதில் உப்பு காரம் எல்லாம் இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 1/2 கப்
உப்பு - தேவையானா அளவு
பால் - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
வெந்தயக்கீரை - சிறிதளவு (Methi)
செய்முறை
ஒரு அகலமான பாதித்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவேண்டும்
அதில் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்
உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்
பின் மசாலாக்கள் சேர்க்க வேண்டும்
மசாலாக்கள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும்
பின் பாலை சேர்க்கவும்
பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு மாவை பிசைய வேண்டும்
பிசைந்த மாவில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து பிசைய வேண்டும்
பிசைந்து 20 நிமிடம் எடுத்து வைக்க வேண்டும்
20 நிமிடம் கழித்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும்
பின் சப்பாத்தி கட்டையில் போட்டு நன்கு தேய்த்து எடுத்து கொண்டு
தோசை கல்லை சூடாக்கி அதில் போட்டு
இரண்டு பக்கமும் சிறிது எண்ணெய் தடவி எடுக்க வேண்டும்
மசாலா சப்பாத்தி ரெடி