சோயா பீன்ஸ் குருமா (Soya Beens or Meal Maker Kuruma)


சோயா பீன்ஸ் குருமா, இது ரொம்ப ஈஸியான குருமா சப்பாத்தி, நாண், தோசைக்கு பொருத்தமான ஒன்று வெறும் சோயா பீன்ஸை கொண்டு சிம்பிளான குருமா 4 பேர்க்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

சோயா பீன்ஸ் - 50கி  (10 நிமிடம் சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து நன்கு தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்)

தக்காளி - 2
பெரிய வெங்காயம்  - 1
பட்டை - 1
கிராம்பு -3
பிரிஞ்சி இலை - 1
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி அரைக்க
சோம்பு - 1 ஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில்எண்ணெய் ஊற்றி கொள்ளவும் 


எண்ணெய் காய்ந்ததும்  பட்டை கிராம்பு பிரிஞ்சி இலையை போடவும்


பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்


வெங்காயம் வணங்கியதும்  தக்காளி சேர்த்து வதக்கவும்


சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி நன்கு வதங்கும்


பின் வேகவைத்து எடுத்த சோயா பீன்ஸை சேர்க்கவும்


சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்கவும்


வதங்கிய பிறகு மசாலாத்தூள்களை சேர்க்கவும்
(மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள,கரம் மசாலா)


மசாலா வதங்குவதற்குள் தேஙகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்



அரைத்த விழுதை குழம்பில் ஊற்றி


தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்



நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்


சுவையான குருமா தயார்.