பீட்ரூட் பொரியல் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. இது ரசம், சாம்பார் தயிர் சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் ஆகும்.
தேவையான பொருட்கள்
பீட்ருட் - 2 (சீவியோ அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவியது - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
ஆயில் - 3 ஸ்பூன்
செய்முறை
பெரிய வெங்காயம் வரமிளகாய் நறுக்கிகொள்ளவும்
ஒரு வாணலியை சூடாக்கி ஆயில் சேர்த்து கடுகு போட்டு பொரியவிடவும்
பின்னர் உளுந்து சேர்த்து வணக்கவும்
உளுந்து பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்க்கவும்
சேர்த்து சீவிய பீட்ருடை சேர்த்து பிறகு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து
பின் மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்கு கிளறி
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு 10 வேகவிடவும்
10 நிமிடம் கழித்து வெந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து
1 நிமிடம் வேகவிடவும்
சுவையான பீட்ரூட் பொரியல் ரெடி