முட்டை பிரியாணி (Egg Biriyani)

 

பிரியாணி வகைகளில் ரொம்ப சிம்பிளாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய பிரியாணி முட்டை பிரியாணி.

தேவையான பொருட்கள்


பட்டை - 1துண்டு
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 ஸ்பூன் 
சீரகம் - 1/2 ஸ்பூன் 
மிளகு - 5
அரிசி - 1 1/2 டம்ளர் (20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்)
முட்டை - 4 (வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)
ஆயில் - 3 ஸ்பூன்
புதினா மல்லி - 1 கப்
இஞ்சிபூண்டு - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
பெரியவெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கிது
பச்சை மிளகாய் - 2

செய்முறை


இந்த மசாலாக்களை ஒன்னும் பாதியுமாக பொடித்துக்கொள்ளவும். ஏன் என்றால் பிரியாணி சாப்பிடும் பொழுது கடிபடாமல் இருக்கும்

 

 தேவையான பொருட்களை ரெடி செய்து கொள்ளவும் 
 

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மசாலாக்களை சேர்க்கவும்


பின் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்


2 நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்


பின் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை 2 நிமிடம் வதக்கவும் 


 பின் மசாலாக்கள் ஒவ்வொன்றாக சேர்த்து


2 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்


நன்கு வதங்கியதும் புதினா மல்லி இலை  சேர்த்து 1 நிமிடம் வதக்கி 


பின்னர் தயிர் சேர்த்து 1 நிமிடம் கிளறி


ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறி


3 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்


பிரியாணி  இப்போது ரெடி அடுத்து முட்டை தயார் செய்ய வேண்டும்


வேகவைத்த முட்டைஒவ்வொன்றிலும் 4 ஆக கட் செய்து கொள்ளவும் அப்போது மசாலாக்கள் உள்ளே இறங்கும்


ஓரு சிறிய வாணலியில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி


1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்  கரம் மசாலா சிறிதளவு சேர்த்து


மசாலாக்கள் கருக்கவிடாமல் உடனே முட்டையை சேர்க்கவும்
 

1நிமிடம் முட்டையை மசாலாவுடன் நன்கு வணக்கியெடுக்கவும்


அடுத்து முட்டைகளை பிரியாணியில் போட்டு கிளறவும்


முட்டை பிரியாணி ரெடி