மீன் வறுவல் (Fish Fry)


மீன் வறுவல் ரொம்ப சிம்பிள் மற்றும் ஈசியாக செய்யலாம் இதே முறையில் எல்லா மீன்களும் செய்யலாம் காரத்திற்கு ஏற்ப மசாலாக்கள் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். 

தேவையான பொருட்கள் 


மீன் - 1 கிலோ (நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்) 

 

அரைக்க 


சின்னவெங்காம் - 10 பல் 
இஞ்சி - 2 துண்டு நறுக்கியது 
பூண்டு - 5 பல் 


மசாலாக்கள் 


உப்பு - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
மீன் பிரை மசாலா - 2 ஸ்பூன் (தேவைப்பட்டால் போடலாம்)

 

செய்முறை 



சின்னவெங்காம் இஞ்சி பூண்டுஇவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு 


நன்கு அரைத்துக் கொள்ளவும் 


பின் கழுவிய மீனை எடுத்து  உப்பு சேர்த்து


மிளகாய் தூள் மற்றும்  மஞ்சள்தூள் சேர்க்கவும்


பின் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும் 


கடைசியாக மீன் மசாலாவை சேர்த்து 

 
நன்கு பிரட்டவும் 


மசாலாக்களை பிரட்டி 30 நிமிடம் ஊறவிடவும்
 

30 நிமிடம் கழித்து தோசை கல்லை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு மீனை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேகவிடவும்


சுவையான மீன் வறுவல் ரெடி