நெய் சாதம் (Ghee Rice)


நெய் சாதம் அல்லது குஷ்கா செய்வதற்கு குறைவான நேரமும் குறைவான பொருட்களும் போதும் ரொம்ப ஈஸியாகவும் மற்றும் சுவையாக இருக்கும். 

தேவையான பொருட்கள் 


அரிசி -1 1/2 கப்  ( 20 நிமிடம் ஊறவைக்கவும் )
நெய் - 4 ஸ்பூன் 
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4 
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
அண்ணாச்சி பூ - 1 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
புதினா - 1/2 கட்டு 
மல்லி - 1/2 கட்டு
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு

செய்முறை 


தாளிக்க தேவையான பொருட்களை தயார் செய்துகொள்ள வேண்டும்


 பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றவும் 


சூடானதும் பட்டை மசாலாக்கள் சேர்க்கவும் 


வணங்கியதும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து  


1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடம் பொன்னிறமாக வரும் வரை வணக்கவும்


நன்கு வணக்கியதும் புதினா மல்லி சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறவும் 


பின்னர் ஊறவைத்த அரிசியை சேர்த்து


3 டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை  மூடி 3 விசில்  விட்டு இறக்கவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்து 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறவும் நன்கு மனமாக இருக்கும்.


நெய்சாதம் தயார் குருமா அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும்