கேரளா மத்தி மீன் குழம்பு (Kerala Fish Curry)



கேரளாவில் மீன் குழம்பு ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள் நாம் பார்ப்பது ரொம்ப சிம்பிளாக செய்யக்கூடிய மீன் குழம்பு. இந்த குழம்பை எந்த மீனை வைத்து வேணாலும் இதே முறையில் செய்யலாம். காரம் நாம் தேவைக்கு ஏற்ப  போட்டுக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் 


மத்தி மீன் - 1 கிலோ  (நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்)

வறுத்து அரைக்க 


தேங்காய் - 1/2 மூடி 
மல்லித்தூள் - 3 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் 

குழம்பு தாளிக்க 


தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் 
வெந்தயம் - 1 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
சின்னவெங்காயம் - 10 பல் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு 
தக்காளி - 2 
புளி - 1 எலுமிச்சை அளவு
மல்லித்தூள் - 2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை 


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் தேங்காயை போட்டு வணக்கவும் 

பிறகு மிளகுத்தூள் 2 ஸ்பூன்


மல்லித்தூள் 3 ஸ்பூன் 


மஞ்சத்தூள் 1 ஸ்பூன் 


சேர்த்து 1 நிமிடம் எண்ணெய் விடாமல் மனம் வரும்வரை வணக்கவும் 


 வணக்கிய தேங்காயை சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்  


புளியை உறவைத்துக் கொள்ளவும்


அடுப்பில் அகலமான பாத்திரம் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி


எண்ணெய்காய்ந்ததும் கடுகு வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் 


பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும்   


சேர்த்து 1 நிமிடம் வணக்கவும்


வணங்கியதும் தக்காளி இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்


பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் 


மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்


வதங்கியதும் அரைத்த மசாலாவை ஊற்றி


புளி கரைசலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 


மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்


கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து கழுவிய மீனை ஒவ்வொன்றாக குழம்பில் போடவும் 


எல்லா மீனையும் போட்டு மூடிபோட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டால்


சுவையான மீன் குழம்பு ரெடி 


மல்லியிலை தூவி இறக்கவும்