புதினா சாதம் (Mint Rice or Puthina Rice)




புதினா சாதம் செய்வது ரொம்ப சிம்பிள் சாதம் மட்டும் இருந்தால் போதும் 10 நிமிஷத்தில் செய்யலாம். 3 பேர்க்கு புதினா சாதம் எப்படி செய்வது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 


அரைக்க 

புதினா  - 1 கப் 
பச்சைமிளகாய் - 2 
புளி - சிறிதளவு 
இஞ்சி - 1 துண்டு 

தாளிக்க 

ஆயில் - 2 ஸ்பூன் 
கடுகு - 1ஸ்பூன் 
பட்டை - 1 துண்டு 
உளுந்து பருப்பு - 1 ஸ்பூன் 
வரமிளகாய் - 3 
உப்பு - தேவையான அளவு 
சாதம் - 3 பேர்க்கு தேவையான அளவு
 

செய்முறை 


புதினா இலைகளை சுத்தம் செய்து அரைக்க தேவையான பொருட்களை 
எடுத்துக்கொள்ளவும் 


அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும் 


பின்னர் தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி 


சூடானதும் கடுகு பட்டை உளுத்தப்பருப்பு சேர்த்து பொரியவிடவும் 


பின்னர் வரமிளகாய் சேர்த்து வணக்கி 


அரைத்த புதினா பேஸ்டை சேர்த்து கலக்கவும் 


2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் 


பின்னர் அடுப்பை அணைத்து வேகவைத்த சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து


நன்கு கிளறவும்


சுவையான புதினா சாதம் தயார்