வெஜ் பிரைட் ரைஸ் இது ஒரு சைனீஸ் டிஷ் இது எல்லாருக்கும் பிடிக்கும் முக்கியமாக குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். நம்ம ஹோட்டல் சாப்பிட போனா ஆர்டர் பண்றது முதல்ல பிரைட் ரைஸாத்தான் இருக்கும். அதுவே ரொம்ப ஈஸியா நம்ம வீட்டுல 2 பேர்க்கு எப்படி செய்யலாம்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சாதம் - 1 கப் (2 பேர்க்கு தேவையான அளவு)
பீன்ஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
முட்டைகோஸ் - 1 கப் அளவு
பெரிய வெங்காயம் - 1
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் காய்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
ஒரு அகலமான வாணலியில் ஆயில் ஊற்றி
சூடானது நறுக்கிய வெங்காயத்தை போட்டு வணக்கவும் 1 நிமிடம் வணங்கினால் போதும்
பிறகு நறுக்கிய காய்களை சேர்த்து வணக்கவும்
1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடம் வணக்கவும்
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் காய்களை வேகவிடவும் ரொம்ப வேகவைக்க கூடாது அரை பாதி வெந்தால் போதும்
காய்கள் ஓரளவு வெந்ததும் சில்லி சாஸ் 2 ஸ்பூன்
சோயாசாஸ் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து
மற்றும் வினிகர் சேர்த்து 1 நிமிடம் வேகவிடவும்
காய்கள் ரெடி
இப்போது வேக வைத்த சாதத்தை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
சுவையான வெஜ் பிரைட் ரைஸ் ரெடி