வெண்பொங்கல் ரொம்ப ஈஸியான டிபன் ஐட்டம் இந்த பொங்கல் செய்ய 20 நிமிடம் போதும். இதற்கு தேங்காய்சட்னி, சாம்பார் நன்றாக இருக்கும்.
(டிப்ஸ் : வேகவைத்த சாதத்தில் உப்பு குறைவாக இருந்தால் உப்பை அப்படியே போட்டு கிளறக்கூடாது ஒரு டம்ளரில் தேவைக்கேற்ப உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து சாதத்தில் சுற்றி ஊற்றி கிளறவும் அப்போது உப்பு சரிசமமாக இருக்கும்)
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 டம்ளர்
பாசிப்பருப்பு - 1/2 டம்ளர்
உப்பு - 2 ஸ்பூன்
தாளிக்க
நெய் - 3 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரி - தேவைக்கேற்ப
இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
செய்முறை
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக ஒரு குக்கரில் போட்டு இரண்டு தடவை நன்கு கழுவ வேண்டும்
பின்னர் 3 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்
நன்கு குழைய வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
தாளிக்க தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்
ஒரு சிறிய வாணலியில் நெய் ஊற்றி
காய்ந்ததும் கடுகு சீரகம் மிளகு சேர்த்து
பொரிந்ததும் கறிவேப்பிலை பச்சைமிளகாய் முந்திரி சேர்த்து வணக்கி
வேக வைத்த சாதத்தில் கொட்டி கிளறவும்
சுவையான மனமான வெண்பொங்கல் ரெடி