Capsicum Potato Gravy




குடமிளகாய் உருளைகிழங்கு கிரேவி இது ஒரு நார்த் இந்தியன் டிஷ்
இது தோசை சப்பாத்திக்கு ஏற்ற கிரேவி.

தேவையான பொருட்கள் 


அரைக்க 

வெங்காயம் - 1 நறுக்கியது 
தக்காளி - 2 நறுக்கியது 
தேங்காய் - 1/2 கப் 
வேர்க்கடலை - 2 ஸ்பூன் அளவு 
சோம்பு - 1 ஸ்பூன் 
கசகசா - 1/2 ஸ்பூன் 
பட்டை - 1 
மஞ்சள்த்தூள் -1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1ஸ்பூன் 
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன் 
ஆயில் - 1 ஸ்பூன்

தாளிக்க 

பெரிய வெங்காயம் - மீட்டியமாக நறுக்கிக்கொள்ளவும் 
உருளைக்கிழங்கு - 2 நறுக்கியது
குடமிளகாய் - 1 நறுக்கியது   
உப்பு  - தேவையான அளவு 
ஆயில் - 2 ஸ்பூன் 
வெந்தயக்கீரை - 1 ஸ்பூன் அளவு 

செய்முறை 


முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவோம்


அடுத்து ஒரு கடாயை  அடுப்பில் வைத்து ஆயில் இல்லாமல் வேர்க்கடலை, சோம்பு, கசகசா, பட்டை போட்டு லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும் 


அடுத்து 1 ஸ்பூன் ஆயில் விட்டு 


காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வனக்கவும் 


 பிறகு தக்காளியை போட்டு 2 நிமிடம் வனக்கி மசாலாக்களை சேர்க்கவும்
 

மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தேங்காயை போட்டு 1 நிமிடம் வனக்கி 


அரக்க எடுத்துக்கொள்ளவும் இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும் 

 

அதே கடாயில் ஆயில் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் வனக்கி


 நறுக்கிய உருளை கிழங்கை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும் 


10 நிமிடம் கழித்து அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 


தேவையான அளவு  தண்ணீர் உப்பு சேர்த்து 


நறுக்கிய குடமிளகாய் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும் 
 

கடைசியாக காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து இறக்கவும்
 

சுவையான மணமான குடமிளகாய் உருளைகிழங்கு கிரேவி ரெடி