சிக்கன் சிந்தாமணி (Chinthamani Chicken)



சிக்கன் சிந்தாமணி கோயமுத்தூர் ஸ்பெஷல் இந்த ரெசிபி செய்வது ரொம்ப சிம்பிள் குறைந்த பொருள்களை வைத்து செய்யலாம். இது ரசம் சாம்பாருக்கு நல்ல சைட்டிஷ். இந்த டிஷ் செய்வதற்கு முக்கியமான பொருள் வரமிளகாய், வரமிளகாய் மட்டும் தான் காரம் மற்ற மசாலாக்கள் தேவையில்லை.

தேவையான பொருட்கள் 

 
சிக்கன் - 1 கிலோ 
சின்ன வெங்காயம் - 1 கப் 
பூண்டு - 10 பல் 
இஞ்சி - சிறிதளவு 
வரமிளகாய் - 10 அல்லது காரத்திற்கு ஏற்ப (விதைகளை எடுத்துக்கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு 
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் 
ஆயில் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை


 தேவையான பொருட்கள்


வெங்காயம் இஞ்சி பூண்டு மூன்றையும் சேர்த்து மிக்சியில் போட்டு ஒன்னும் பாதியுமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்


பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை போட்டு

2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் 


பின் இரண்டாக நறுக்கிய வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு 


1 நிமிடம் வதக்கவும் 


அடுத்து நன்கு கழுவிய சிக்கனை போட்டு கிளறவும் 


கிளறி 1 ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு கிளறவும் 


தேவையான அளவு உப்பு சேர்க்கவும் 


உப்பு சேர்த்து  கிளறி மூடி வைத்து  தண்ணீர் ஊற்றாமல் 25-30 நிமிடம் வரை வேகவைக்கவும்  (தண்ணீர் ஊற்ற கூடாது சிக்கனில் இருக்கும் தண்ணீர் போதும்)


30 நிமிடம் கழித்து மூடியை திறந்து வைத்து தண்ணீர் வற்றும் வரை டிரையாக வேகவைக்கவும்


நன்கு டிரையாக வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்


காரமான சிக்கன் சிந்தாமணி ரெடி