முட்டை பாஸ்தா (Egg Pasta)


 

குழந்தைகளுக்கு பிடித்த டிஷ் பாஸ்தா இதை மதிய உணவுக்கு முட்டை சேர்த்து வெரைட்டியாக செய்து கொடுக்கலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் . இந்த பாஸ்தாவை 15 நிமிடத்தில் செய்யலாம்.

தேவையான பொருட்கள் 


பாஸ்தா - 1 கப் 
முட்டை - 2 
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது 
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது 
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
சோயா சாஸ் - 2 ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
ஆயில் - 2 ஸ்பூன் 

செய்முறை 


பாஸ்தா செய்ய தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்


பின்னர் பாஸ்தாவை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும் 


 அதில் 1/2 உப்பு, 1/2 ஸ்பூன் ஆயில் சேர்க்கவும். ஆயில் சேர்த்தால் ஒட்டாது. வெந்ததும் தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை எடுத்துவைத்து கொள்ளவும் 


 பின்னர் தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வனக்கவும் 


அடுத்து 2 முட்டைகளை கலந்து அதை சேர்க்கவும்  


 1/2 நிமிடம் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக கிளறவும் 


  பிறகு மசாலாக்களை சேர்த்து 1 நிமிடம் கிளறவும் 


 அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து 


 மற்றும் சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் நன்கு கிளறி  


 தேவையான அளவு உப்பு சேர்க்கவும் 


 பின்னர் வேகவைத்த பாஸ்தாவை போட்டு நன்கு கிளறவும் 


சுவையான முட்டை பாஸ்தா ரெடி