உருளைக்கிழங்கு கிராஃப்ஸ் ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி மைதா மாவில் செய்யக்கூடிய ரெசிபி இதில் முட்டை சேர்த்து செய்யலாம் அல்லது முட்டை இல்லாமல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
உப்பு - 1 ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கேற்ப
தாளிக்க
உருளைக்கிழங்கு - 2மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கரம்மசாலா - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
ஆயில் - 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்துப்பருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - சிறிதளவு
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்
உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு
உளுந்தபருப்பை சேர்த்து
பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியதும் மசித்த உருகிழங்கை சேர்க்கவும்
பின்னர் மசாலாக்களை சேர்த்து கிளறவும்
2 நிமிடம் கிளறி எடுத்துவைக்கவும் மசாலா கலவை ரெடி
இப்போது மாவுக்கு 1 கப் மைதா எடுத்துக் கொள்ளவும்
உப்பு 1 ஸ்பூன் சேர்த்து
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
நன்கு தோசைமாவு பதத்திற்கு கலக்கவும்
அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி
ஒரு துணி அல்லது பேப்பரை வைத்து துடைத்துக் கொள்ளவும்
பின்னர் அந்த மாவை தோசை போல ஊற்றி கொள்ளவும் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வேகவைத்து எடுத்து கொள்ளவும்
பின்னர் அந்த தோசையில் மசாலாக் கலவையை வைத்து
எதிர் இரண்டு பக்கங்களை கரைத்து வைத்த மைதா மாவைக்கொண்டு ஒட்டிக் கொள்ளவும்
இதே போல் நான்கு பக்கமும் ஒட்டி கொள்ளவும்
அதை மீண்டும் தோசைக்கல்லில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கல்லில் போட்டு 2 நிமிடம் வேகவைத்து
திருப்பி போட்டு 2 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
இப்போது உருளைக்கிழங்கு கிராஃப்ஸ் ரெடி