Potato Smiley Snack




உருளைக்கிழங்கு ரெசிபி எல்லாருக்கும் பிடிக்கும் அதில் ஒரு மொறுமொறு ஸ்மைலி ஸ்னேக்ஸ் ஈசியாக செய்யலாம்.

குறிப்பு 


மாவு தேய்ப்பதற்கு சப்பாத்தி கட்டைக்கு பதில் பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி தேய்த்தால் ஒட்டாது எடுப்பதற்கு ஈசியாக இருக்கும்.


தேவையான பொருட்கள்


உருளைக்கிழங்கு - 1 அல்லது தேவைக்கேற்ப
கார்ன்பிளாவர் மாவு - 2 ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள்  - 1 ஸ்பூன் (Optional)
ஆயில் - பொரிப்பதற்கு

செய்முறை

         
              உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்                                   

பின் அதை பொடிப்பொடியாக சீவி வைத்துக்கொள்ளவும் 
 

அடுத்து தேவையான பொருட்களை தயார் செய்து 


 பின்னர் அதை ஒவ்வொன்றாக உருளைக்கிழங்கில் சேர்த்து 


 தண்ணீர் சேர்க்கமால் மாவுபோல் பிசையவும் 


 பின்னர் சப்பாத்தி மாவுபோல் உருட்டி அதில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு உருட்டி கொள்ளவும் 


 இப்போது ஸ்மைலி செய்வதற்கு சப்பாத்தி கட்டையில் எண்ணெய் தேய்த்து 
அந்த உருண்டையை போட்டு தேய்க்கவும் கொஞ்சம் கெட்டியாக தேய்த்து கொள்ளவும் லேசாக இருந்தால் ஒட்டிக்கொள்ளும். 
 

 தேய்த்த பிறகு ஒரு மூடி அல்லது ஒரு சிறிய கப்பை கொண்டு ரவுண்டாக கட் செய்து கொள்ளவும்  


 இதேபோல் மீதம் இருக்கும் மாவை மறுபடியும் தேய்த்து ஸ்மைலி செய்யலாம் 


 ஒரு ஸ்பூன் கொண்டு ஸ்மைல் போல் கட் செய்யவும் 


 பின்னர் ஒரு ஸ்ட்ரா அல்லது ஒரு குச்சியை கொண்டு கண் செய்து கொள்ளவும் 


 இதோ ஸ்மைலி ரெடி இனி இதை பொரிக்க வேண்டியதுதான்


ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 


 ஒவ்வென்றாக போட்டு 1 நிமிடம் வேக வைத்து எடுக்கவும் 


 இப்போது சூப்பரான மொறுமொறு ஸ்மைலி ரெடி இதற்கு தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.