ராஜ்மா கிரேவி (Rajma Grevy)




ராஜ்மா கிரேவி ரொம்ப சத்தான பருப்பு வகை ரொம்ப சிம்பிளாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்


ராஜ்மா - 1 கப்
பட்டை - 1
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1 ஸ்பூன்
தக்காளி - 2 நறுக்கியது
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
ஆயில் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
காய்ந்த வெந்தய கீரை - 1 ஸ்பூன்

செய்முறை


1 கப் ராஜ்மாவை 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்  

 

அதை ஓரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு 1 ஸ்பூன் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு வேகவைத்து இறக்கவும்


தாளிக்க தேவையான பொருட்களை தயார் செய்துகொள்ளவும்


தாளிக்க அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு மசாலாக்களை போட்டு 


வணங்கியதும் நறுக்கிய வெங்காயம் போட்டு வணக்கவும் 


வெங்காயம் நன்கு வணங்கியதும் தக்காளியை போட்டு 1 நிமிடம் வணக்கவும்


வணங்கியதும் மசாலாக்கள் போட்டு 2 நிமிடம் வதக்கவும்  


அடுத்து மசாலாக்கள் பச்சை வாசனை போனதும் வேகவைத்த ராஜ்மாவை போட்டு


தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு 


கடைசியாக காய்ந்த வெந்தய கீரையை கசக்கி தூவி இறக்கவும்


சுவையான மணமான ராஜ்மா கிரேவி ரெடி