கோதுமை மாவை வைத்து சிம்பிளாக ஒரு மொறுமொறு ஸ்னேக்ஸ் 20 நிமிஷத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
மைதா - 1கப்
எள்ளு - 1 ஸ்பூன்
ஓமம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
ஆயில் - பொரிப்பதற்கு
செய்முறை
மாவு மற்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும்
பின்னர் அதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசையவும்
பின்னர் சூடான ஆயில் சேர்த்து மாவை பிசையவும்
நன்கு பூரி மாவு பதத்திற்கு மாவை உருட்டி பிசைந்து 15 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும்
15 நிமிடம் கழித்து சப்பாத்தி கட்டையில் உருட்டிய மாவை பாதியாக பிரித்து சப்பாத்திபோல் மிக லேசாக உருட்டிக்கொள்ளவும்
பின்னர் ஒரு கத்தியை வைத்து நேராக கோடு போல கட் செய்து கொள்ளவும்
இதேபோல எதிர் பக்க்கத்திலிருந்து சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்
இந்த மாதிரி அல்லது விருப்பத்திற்கேற்ப கட் செய்து கொள்ளவும்
பின்னர் அதை ஒரு பிளேட்டில் மாத்தி கொள்ளவும்
பொரிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும்
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரிக்கவும் எண்ணெய் கொதிப்பு அடங்கியதும் எடுக்கவும்
மொறுமொறு காரமான ஸ்னேக்ஸ் ரெடி