வெஜ் பாஸ்தா (Veg Pasta)


 
வெஜ் பாஸ்தா ஈஸியான கிட்ஸ் லன்ச் பாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள் 


பாஸ்தா - 1 கப்
கேரட் - 2 பொடியாக நறுக்கியது
குடமிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆயில் - 2 ஸ்பூன்

செய்முறை 


 பாஸ்தா செய்ய தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்

 
பின்னர் பாஸ்தாவை வேகவைக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும் 


அதில் 1/2 உப்பு, 1/2 ஸ்பூன் ஆயில் சேர்க்கவும். ஆயில் சேர்த்தால் ஒட்டாது. வெந்ததும் தண்ணீரை வடிகட்டி பாஸ்தாவை எடுத்துவைத்து கொள்ளவும் 


ஓரு கடாயை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் நன்கு வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்


இரண்டும் நன்கு வதக்கியதும் நறுக்கிய காய்களை சேர்த்து 


பின்னர் மசாலாக்களை சேர்த்து 1 நிமிடம் வதக்கி 


1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேகவைக்கணும் 


ஓரளவு வெந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் 


பின்னர் வேகவைத்த பாஸ்தாவை போட்டு 


நன்கு கிளறவும் 


சுவையான பாஸ்தா ரெடி