வெஜ் பிரியாணி செய்வது ரொம்ப சிம்பிள், பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லேருக்கும் பிடிக்கும் அதை ஈஸியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பட்டை - 1துண்டு
கிராம்பு - 4
பிரிஞ்சி இலை - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
அன்னாசி பூ - 1
அன்னாசி பூ - 1
கேரட் - 2 பொடியாக நறுக்கியது
பீன்ஸ் - 10 பொடியாக நறுக்கியது
சோயாபீன்ஸ் - சிறியது 1 கப்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 3 ஸ்பூன்
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
ஆயில் - 3 ஸ்பூன்
அரிசி - 1 1/2 டம்ளர் (20 நிமிடம் ஊறவைக்க வேண்டும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான காய்களை நறுக்கிக்கொள்ளவும்
பின்னர் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து ஆயில் ஊற்றி காய்ந்ததும் பட்டை மசாலாக்களை போடவும்
பொரிந்தவுடன் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் பொன்நிறம் ஆகும் வரை வதக்கவும்
பின்னர் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து 1 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கி
தக்காளியை சேர்த்து 1 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கினால் தக்காளி சீக்கிரம் வதங்கும்
1 நிமிடம் கழித்து மசாலாதூள்களை சேர்க்கவும்
2 நிமிடம் அதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வந்ததும்
நறுக்கிய காய்களையும் சோயா பீன்ஸ்ம் சேர்த்து கிளறவும்
கிளறிய பிறகு ஊறவைத்த அரிசியை சேர்த்து
1 1/2 டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி
குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும்
கேஸ் அடங்கியதும் குக்கரை திறந்து கிளறிவிடவும் பளபளவென உதிரியாகஇருக்கும்
இப்போது மனமான சுவையான வெஜ் பிரியாணி ரெடி