தேவையான பொருட்கள்
காளிபிளவர் - 1 கப் சிறு துண்டாக நறுக்கியது
உருளைக்கிழங்கு - 2 பொடியாக நறுக்கியது
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சைமிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவியது - 1 கப்
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
ஆயில் 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தேவையான பொருட்களை நறுக்கி எடுத்துக்கொள்வோம்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு சேர்த்து பெரிய விடவும்
பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வனக்கவும்
பொன்னிறம் ஆனதும் நறுக்கிய உருளைக்கிழங்கை முதலில் சேர்த்து 1 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்
உருளைக்கிழங்கு ஓரளவு வெந்ததும் காளிபிளவர் சேர்த்து
தேவையான அளவு தண்ணீர்
உப்பு சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்
அரை பாதி வெந்ததும் மசாலாக்களை சேர்த்து
கிளறி 5 நிமிடம் வேக வைக்கவும்
காய் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும்
சுவையான காளிபிளவர் உருளைக்கிழங்கு பொரியல் ரெடி இது சாம்பார் ரசம் சத்தத்திற்கு நன்றாக இருக்கும்