சக்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்பாசிப்பருப்பு - 1/2 கப்
வெல்லம் - 200 கி அல்லது தேவைக்கேற்ப
பால் - 1 டம்ளர்
முந்திரி - 10
திராட்சை - 10
ஏலக்காய் - 4
நெய் - 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்
பின்னர் பச்சரிசியும் பருப்பையும் ஒன்றாக கழுவி ஒரு குக்கரில் சேர்த்து 4 டம்ளர் தண்ணீ ர் சேர்த்து
1 டம்ளர் பால் சேர்த்து நன்கு குழைய 5 விசில் விட்டு இறக்கவும்
கேஸ் அடங்கியதும் சத்தத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும் கொள்ளவும்
பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு
முந்திரி திராட்சையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்
அடுத்து அதே பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு கரைத்து கொள்ளவும்
கரைத்த சக்கரை பாகை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும் சக்கரையில் உள்ள தூசி மண் இருந்தால் வந்துவிடும்
பின் அந்த பாகை மசித்த சத்தத்துடன் சேர்த்து
அடுப்பில் 2 நிமிடம் மிதமான சூட்டில் வைத்துகிளறவும்
2 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து
கடைசியாக 1 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்
சுவையான மனமான சக்கரை பொங்கல் ரெடி