நெத்திலி கருவாடு தொக்கு (Nethili Karuvadu Thokku)


நெத்திலி கருவாடு தொக்கு செய்வது ரொம்ப சிம்பிள். இது சத்தத்திற்கு, இட்லி தோசைக்கு நன்றாக இருக்கும். இப்போது 2 பேர்க்கு எப்படி செய்வது பார்ப்போம் முதலில் நெத்திலி கருவடை 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும் பின் 20 நிமிடம் கழித்து 5-6 முறை நன்கு கழுவ வேண்டும். அப்போது அதிலிருக்கும் மண் தூசிகள் போகும். 
  
(குறிப்பு : கருவாடு தொக்கில் கடைசியாக இறக்குவதற்கு முன் 1/2 ஸ்பூன் சக்கரை சேர்த்து கொதிக்கவிடவும் சுவை நன்றாக இருக்கும் ஏன்னெறால் தக்காளியின் புளிப்பை சரி செய்யும், செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.)


தேவையான பொருட்கள் 

நெத்திலி கருவாடு - 100 கிராம் 
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது 
தக்காளி - 3 பொடியாக நறுக்கியது 
பூண்டு - 2 பல் பொடியாக நறுக்கியது 
கறிவேப்பிலை - சிறிதளவு 
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் - 2 ஸ்பூன் 
கடுகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
ஆயில் - 3 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை 


முதலில் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்   


அடுத்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் சேர்த்து பெரிய விடவும் 


பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை சேர்த்து 


1 ஸ்பூன் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்


வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து 1 நிமிடம் மூடி வைத்து நன்கு வதக்கவும் 


பின்னர் மசாலாக்களை சேர்த்து 2  நிமிடம் வதக்கவும் 


மசாலாவில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்

கொதித்த பிறகு நன்கு கழுவிய கருவாடை சேர்த்து 


தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து


10 நிமிடம் மூடி கொதிக்க வைக்கவும் 


சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி