காளிபிளவர் பிரைட் ரைஸ் ( Gobi Fried Rice / Cauliflower Fried Rice )



காளிபிளவர் பிரைட் ரைஸ் ( Gobi Fried Rice / Cauliflower Fried Rice )

தேவையான பொருட்கள்

காளிபிளவர்  - 1 சிறியது 
கேரட் - 2 பொடியக நறுக்கியது
பீன்ஸ் - 10 பொடியக நறுக்கியது
உருளைக்கிழங்கு - 1 பொடியக நறுக்கியது
பெரிய வெங்காயம் - 1 பொடியக நறுக்கியது
பூண்டு - 4 பல் பொடியக நறுக்கியது
பச்சை மிளகாய் - 1
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன் 
மைதா - 2 ஸ்பூன்
கார்ன்பிளார் மாவு - 2 ஸ்பூன்
ஆயில் - பொரிக்க மற்றும் தளிக்க
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு - 2 ஸ்பூன்
வேகவைத்து வடித்த சாதம் - 1 கப் அல்லது 2 பேருக்கு\
 
செய்முறை 
 
முதலில் தேவையான பொருட்களை நறுக்கி வைத்துக்கொள்ளவும்


பின் ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா - 2 ஸ்பூன் மற்றும் கார்ன்பிளார்
 மாவு - 2 ஸ்பூன் பொட்டு

 
இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன் மற்றும் மிளகாய் தூள் - 2 ஸ்பூன், உப்பு -1 ஸ்பூன் சேர்த்து

 
சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரளவு பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்துக் கொள்ளவும்  


பிறகு அந்த மாவில் காளிபிளவர் பூவை சேர்த்து மாவுடன் கலந்து 15 நிமிடம் எடுத்து வைத்துக் கொள்ளவும்


பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து காளிபிளவரை பொரிப்பதற்க்கு ஆயில் சேர்த்து சூடாக்கவும்


பின் மாவில் கலந்த காளிபிளவரை எண்ணெயில் பொட்டு 


3 நிமிடம் வேகவைத்து


பொரித்து எடுக்கவும்


இப்போது காளிபிளவர் பிரை ரெடி


அடுத்து தாளிப்பதற்க்கு அடுப்பில் அகலமான வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு சேர்த்து வணக்கவும்


பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வணக்கவும்


வெங்காயம் வணங்கியதும் இஞ்சி பூண்டு - 1 ஸ்பூன் சேர்த்து பச்சை வாசணை போகும் வரை 1 நிமிடம் வதக்கவும்


வதங்கிய உடன் காய்களை சேர்த்து மற்றும் சோயா சாஸ் 1 ஸ்பூன் ஊற்றவும்
 

பிறகு தக்காளி சாஸ் ஊற்றி நன்கு கிளறவும்


கிளறிய பிறகு வேகவைத்த சாதத்தை சேர்த்து


கடைசியாக பொரித்த காலிஃபிளர் ஐ சேர்த்து கிளறவும்


இப்போது காலிஃப்ளவர் பிரைட் ரைஸ் ரெடி